Slipped Upper Femoral Epiphysis (SUFE)” Beware of kids presenting with a painful limp & Hip pain between 12 to 14 years of age .
பத்திலிருந்து பதினாறு வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் கிழே விழும் காரணத்தினாலயோ மற்ற காரணத்தினாலயோ இடுப்பு பகுதியில் திடீரென வலியுடன் தாங்கி தாங்கி நடந்தால் அவர்களுக்கு ஸிலிப்ட் அப்பர் பெமோரல் எப்பிசைசஸ் என்று சொல்லக்கூடிய பிரச்சனை இருக்கின்றதா என நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இது போன்ற குழந்தைகளால் வலியுள்ள காலில் ஊன்றி நடப்பதற்கு முடியாது.
நிறைய பேர் எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி விடுகிறார்கள் . ஒரு சிறந்த வல்லுனர்களால் மட்டுமே இதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஒரேயொரு ஸ்குரு பொருத்துவதன் மூலமாக இந்த பிரச்சனையில் முழுவதுமாக தீர்வு காணலாம்.
இப்படி செய்வதன் மூலம் வலி குறைவது மட்டுமல்லாமல் இடுப்பு மூட்டுகள் புத்துணர்வு அடையும். கவனிக்காத பட்டசத்தில் இடுப்பு பந்து கெட்டு போய் குழந்தை வாழ்நாள் முழுவதும் தாங்கி தாங்கி நடக்க வேண்டியிருக்கும்.